V24s

"Get Updates : Subscribe to our e-mail newsletter to receive updates........" "Good Luck frnds" Admission 2017 Application Form 2017 Colleges Entrance Exam 2017 Results 2017 Notification 2017 University Educational Jobs 2017 Government Jobs 2017

Search This Blog v24s guys

Follow by Email

11 May, 2017

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தை தட்டி சென்றது விருதுநகர்..!

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் 97.85 சதவீத தேர்ச்சியை பெற்று விருதுநகர் மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.

9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சற்று முன்னர் வெளியிடப்பட்டது. எந்த ஆண்டும் இல்லாத வகையில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்படாமல், கிரேடு முறையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதமானது 92.1 சதவீதமாக உள்ளது. எப்போதும் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தை 96.77 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று இராமநாதபுரம் மாவட்டமும், மூன்றாவது இடத்தை 96.69 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று ஈரோடு மாவட்டமும் பிடித்துள்ளன.

குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள மாவட்டங்களில் கடலூர் மாவட்டம் 84.86 சதவீத தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பெற்றுள்ளது. இதற்கு முந்தைய இடத்தில் 84.99 சதவீத தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டமும் உள்ளன.

தேர்ச்சி விகிதங்கள் பொறுத்தவரை கடந்த ஆண்டு முதலிடம், கடைசி இடம் பிடித்த மாவட்டங்கள் இந்த ஆண்டும் அதே இடத்தை தக்க வைத்துள்ளன.

ப்ளஸ்டூ தேர்வு முடிவுகள்.. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே கலக்கல்!!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் இன்றுவெளியிடப்பட்டுள்ளன. 

ப்ளஸ் டூ தேர்வு முடிவில் இனி ரேங்குகள் முறை இருக்காது என நேற்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது. மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் 92.1% என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட பிளஸ் டூ தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 0.7 அதிகம் ஆகும். மாணவர்கள் 89.3% தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 94.5% தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 1813 பள்ளிகள் 100% தேர்ச்சி கொடுத்துள்ளன. இவற்றில் 292 அரசு பள்ளிகளும் அடங்கும்.

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் மொத்த தேர்ச்சி விகிதம் 92.1%

இன்று வெளியான ப்ளஸ் டூ தேர்வு தேர்வு முடிவுகளில் தமிழத்தில் தேர்ச்சி சதவிகிதம் 92.1 ஆக உள்ளது. மாணவர்கள் 89.3 சதவீதமும், மாணவிகள் 97.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ப்ளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 92.1 சதவீதமாகவும், இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89.3 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.5 சதவீதமாகவும் உள்ளது. மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு இடையிலான தேர்ச்சி இடைவெளி 5.2 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.4 ​ சதவீதமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைக் காட்டிலும், மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதமே அதிகமாக உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 1813 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அதில், 292 பள்ளிகள் அரசு பள்ளிகள் ஆகும்.
There was an error in this gadget

Popular Posts

Recent Posts

Google Analytics